ஜம்மு & காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா இல்லத்தில் வரும் 24ஆம் தேதி, குப்கார் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை, குப்கார் கட்சியின் செய்தித் தொடர்பாளர் யூசுப் தரிகாமி தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கு சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
அந்த முடிவுக்கு முன்னதாகவே மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பின.