தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 15, 2021, 10:37 AM IST

ETV Bharat / bharat

பயங்கரவாதிகள் பற்றிய தகவலுக்கு தலா ரூ.10 லட்சம்: சுவரொட்டி ஒட்டிய ஜம்மு காவல் துறை

காஷ்மீரின் சோபோர் நகரின் முக்கிய வீதிகளில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அவர்கள் குறித்து தகவல் கொடுத்து, கைது செய்ய உதவினால் தலா ரூ.10 லட்சம் தருவதாக அம்மாநில காவல் துறை அறிவித்துள்ளது.

J&K cops put out 'wanted' posters of LeT militants
J&K cops put out 'wanted' posters of LeT militants

ஸ்ரீநகர்(காஷ்மீர்): அண்மையில் வடக்கு காஷ்மீரின் சோபோர் நகரில் 2 காவல் துறையினரும் 2 பொதுமக்களும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து சோபோர் நகரின் முக்கிய வீதிகளில் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அவர்கள் குறித்து தகவல் கொடுத்து, கைது செய்ய உதவினால் தலா ரூ.10 லட்சம் தருவதாக அம்மாநில காவல் துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு சுவரொட்டிகள் நகரின் முக்கிய வீதிகள்தோறும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் சோபோர் மாவட்டத்தின் போன்போரா டேஞ்சர்போரா என்னும் கிராத்தைச் சேர்ந்த முடசர் அஹமத் பண்டிட், பிரத்-கல்லன் பகுதியைச் சேர்ந்த குர்ஷீத் அஹமத் மிர், வார்போரா கிராமத்தைச் சேர்ந்த ஃபயஸ் அஹமத் வார் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து தகவல் தெரிவித்த காஷ்மீர் காவல் துறை உயர் அலுவலர், பாதுகாப்புத்துறை படைகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேகத்திற்குரியவர்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜயின்கைர், நவ்போரா காலன், டேஞ்சர்போரா மற்றும் சோபோர் நகரில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எந்தவொரு வெளிநாட்டினரும் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details