தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுமார் 35 கிலோ எடை கொண்ட கண்ணிவெடி அழிப்பு - வெடிகுண்டு செயலிழப்புப் படை

ஜம்மு காஷ்மீரில் சுமார் 35 கிலோ எடைகொண்ட கண்ணிவெடியைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். பிறகு வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அதனை அழித்தனர்.

Massive IED
Massive IED

By

Published : Sep 6, 2022, 8:42 PM IST

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகர் மாவட்டத்தில் கான்மோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, பாதுகாப்புப்படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு செயலிழப்புப் படை வரவழைக்கப்பட்டு, கண்ணிவெடியைப் பாதுகாப்பாக எடுத்து, பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வெடிக்கச்செய்தனர்.

அந்த கண்ணிவெடியின் எடை 30 முதல் 35 கிலோ இருக்கும் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வங்கியின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details