தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Republic Day: 15,000 அடி உயரத்தில் தேசிய கொடியை பறக்கவிட்ட எல்லை வீரர்கள் - 73ஆவது குடியரசு தினம் கொண்டாட்டம்

இந்தோ - திபெத் எல்லைப் படையினர் லடாக் எல்லையில் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் மூவர்ண தேசிய கொடியை பறக்கவிட்டனர்.

Republic Day
Republic Day

By

Published : Jan 26, 2022, 9:58 AM IST

நாட்டின் 73ஆவது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூவர்ண தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், நாட்டின் வடக்கு எல்லைப் பகுதியான லாடக் பனிச்சிகரத்தில் சுமார் 15,000 அடி உயரத்தில் மைனஸ் 40 டிகிரி உறைபனியில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளனர்.

தேசிய கொடியை ஏற்றி பாரத் மாதா கி ஜெய் என முழக்கமிட்டுள்ளனர். இந்திய பாதுகாப்பு படையில் முக்கிய பிரிவான இந்தோ திபெத் எல்லைப் படை லடாக்கின் காரகோரம் எல்லையிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் ஜேசப் லா எல்லைப் பகுதி வரை சுமார் மூவாயிரத்து ஐநூறு கி.மீ. பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறது.

இந்தியா - சீனா எல்லைகளை பாதுகாப்பதற்காகவே இவர்கள் மலைச் சிகர போர் பாதுகாப்பு முறையில் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரயில்வே தேர்வு முடிவுக்களுக்கு எதிராக மாணவர்கள் பெரும் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details