தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எடியூரப்பா நெருங்கிய உதவியாளர் வீட்டில் சோதனை! - வருமான வரித்துறை

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவின் நெருங்கிய உதவியாளர் உள்பட பெங்களூருவில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை (அக்.7) வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள்.

IT raid
IT raid

By

Published : Oct 7, 2021, 3:26 PM IST

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் வருமான வரித்துறை அலுவலர்கள் இன்று (அக்.7) காலை ஒப்பந்ததாரர்கள், வணிகர்கள் மற்றும் பட்டய கணக்காளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.

சுமார் 300 அலுவலர்கள் கொண்ட குழு ஒரே நேரத்தில் நகரத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளை நடத்தியது. வரி மோசடி மற்றும் வரி மோசடிக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனையானது அதிகாலை 5 மணியளவில் தொடங்கியது. வருமான வரித்துறை அலுவலர்கள் 120 இன்னோவா கார்களில் வந்து இறங்கினர்.

மேலும் சுவாரஸ்யமாக, பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பிஎஸ் எடியூரப்பாவின் நெருங்கிய உதவியாளர் உமேஷின் வீட்டிலும் சோதனை நடந்தது.

அவர்கள் உமேஷுக்குச் சொந்தமான 6 -க்கும் மேற்பட்ட இடங்களில் அவரது உறவினர்களின் மற்ற வீடுகளில் சோதனை நடத்தினர். வரி மோசடி தொடர்பான சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கைமாறிய 1,100 கிலோ தங்கம்- சிக்கிய ஸ்ரீ கிருஷ்ணா ஜூவல்லரி!

ABOUT THE AUTHOR

...view details