தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

BBC IT Raid: டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு! - New Delhi BBC

டெல்லியில் உள்ள பிபிசி ஊடகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு!
டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

By

Published : Feb 14, 2023, 12:58 PM IST

Updated : Feb 14, 2023, 2:21 PM IST

டெல்லி:பிரபல ஊடக நிறுவனமான பிபிசி, உலகமெங்கும் உள்ள வெவ்வேறு மொழிகளில் பல கிளைகளாக பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள பிபிசி ஊடகத்தின் அலுவலகத்தில் இன்று (பிப்.14) வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், இதற்கான காரணம் ஏதும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவிலை. முன்னதாக தற்போதைய பிரதமர் மோடி, 2002ஆம் ஆண்டில் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது இஸ்லாமியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரத்தை மையமாக வைத்து பிபிசி தயாரித்த ‘India: The Modi Question' என்ற ஆவணப்படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டது.

இது பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகளைக் கொண்டதால், பிபிசியின் இந்த ஆவணப்படத்தை தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ், இந்தியாவில் வெளியிட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்தது. மேலும் ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் இந்த ஆவணப்படம் தொடர்பான சமூக வலைதள பதிவுகளை, சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்கள் நீக்கும் பணியை மேற்கொண்டன. அதேநேரம், பிபிசியின் ஆவணப்படத்துக்கு தடை விதித்திருப்பது, பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது என பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் அந்த ஆவணப்படத்தை திரையிட்டனர்.

இதுதொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் இந்தியாவில் உள்ள பிபிசி அலுவலகத்தில், மத்திய அரசின் கீழ் உள்ள வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுதொடர்பாக பிபிசி முன்னாள் ஊழியரை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘நான் தற்போது பிபிசியில் பணிபுரியும் எனது நண்பர்களில் மொபைலுக்கு அழைத்தேன்.

ஆனால், அவர்களது மொபைல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் அசாதாரணமான சூழலை உருவாக்கி உள்ளது. அலுவலகத்தின் வாசல் சீலிடப்பட்டுள்ளதாக தகவல் அறிந்தேன்’ என்றார். அதேநேரம், இன்று காலை முதல் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை உட்பட தென் மாநிலங்களில் 60 இடங்களில் ஐடி ரெய்டு!

Last Updated : Feb 14, 2023, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details