கரீம்நகர்(தெலுங்கானா): ஒரு தாயின் அன்புக்கு உலகில் ஈடேதும் கிடையாது. இது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளிடமும் உள்ளது என்பதற்கு உதாரணமாய் ஒரு சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது. ங
கரீம்நகர் மாவட்டம் சிகுர்மாமிடி மண்டலம் சின்ன முல்கனூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டியுடன் சாலையை கடக்க முயன்ற குரங்கு மீது லாரி மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த தாய் குரங்கு குட்டியை பத்திரமாக காப்பாற்றியது.
தாய் குரங்கு விபத்தில் காயம் அடைந்து அசையாமல் விழுந்து கிடக்கும் போது, குட்டி பால் குடிக்க முற்படுவதையும், ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்ததையும் அப்பகுதி மக்கள் கண்டு மனவேதனை அடைந்தனர். வெங்கடேசன் என்ற நபர் முயற்சி எடுத்து தனது பண்ணைக்கு தாயையும் குட்டியையும் அழைத்து சென்று கவனித்துக்கொள்ள ஏற்பாடுகளை செய்தார்.
தற்போது இந்தக் குரங்குக்கு 'கோபாலமித்ரா'ஷிவா சிகிச்சை அளித்து வருகிறார். விபத்தில் தாய் குரங்கின் முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அதனால் அசைய முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். எலும்பு முறிவை சரி செய்வதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், இதையெல்லாம் அறியாத குட்டி குரங்கு வழக்கம் போல் தாயிடம் பால் குடிக்க ஏங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:உத்தரபிரதேசத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகள் - விசாரணை காவலில் நால்வர்