தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 22, 2023, 10:46 PM IST

ETV Bharat / bharat

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்!

பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இரண்டு செயற்றைக்கோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Satellite
செயற்கைக்கோள்

ஸ்ரீஹரிகோட்டா: புவி கண்காணிப்பு, தகவல் தொடர்பு என பல்வேறு பணிகளுக்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும், இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்படுகிறது. இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டின் இரண்டு செயற்கைக்கோள்கள் இன்று (ஏப்ரல் 22) விண்ணில் ஏவப்பட்டன.

இதுதொடர்பாக இஸ்ரோ மற்றும் என்எஸ்ஐஎல் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இதற்காக பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது. அதன்படி டேலியோஸ்-2, லுமிலைட்-4 ஆகிய செயற்கைக்கோள்கள் அடங்கிய ராக்கெட், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிற்பகல் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 2 செயற்கைக் கோள்களும் 757 கிலோ எடை கொண்டவையாகும்.

புவி கண்காணிப்பு மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கு இவை பயன்படுத்தப்படும் என்றும், டேலியோஸ்-2 செயற்கைக்கோள் எந்த கால சூழலிலும் புவியை கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லூம்லைட் செயற்கைக்கோள் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ராக்கெட்டில் போயம்-2 என்ற விண்வெளி ஆய்வு சாதனமும் பொருத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் 2 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பஞ்சாப்பில் காலிஸ்தான் தனி நாடு பற்றி யாரும் பேசவில்லை: அமித்ஷா

ABOUT THE AUTHOR

...view details