டெல் அவிவ்: இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையேயான எல்லைப் பிரச்சினை குறித்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து அவ்வப்போது போர் நடைபெற்று வந்த நிலையில் சர்ச்சைக்குரிய காசா நகரை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளும் தொடர்ந்து போரிட்டு வருகின்றன.
பாலஸ்தீனத்தை அடிப்படையாகக் கொண்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு இஸ்ரேலில் குண்டு வீச்சுத் தாக்குதலை கடந்த அக்.7 ஆம் தேதி தொடங்கியது. அதன்பின், இஸ்ரேலும் தனது தாக்குதலை தொடங்கப் போவதாக அறிவித்தது. இரு நாடுகளும் ஏறத்தாழ ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி போரிட்டு வருகின்றன. தற்போது வரை இரு நாடுகளும் போரை நிறுத்த வில்லை.
இந்த போருக்கு ஐ.நா.சபை கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. அது மட்டுமல்லாமல், இஸ்ரேலுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கியது. இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தேவையான ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.
முன்னதாக தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் சிக்கித் தவித்த இந்தியர்களை 'ஆப்ரேஷன் அஜய்' என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து இந்தியர்களை மீட்டனர்.