தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’பெண் சக்திக்கு சிறந்த உதாரணம் இந்திரா காந்தி’ - ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பெண் சக்திக்கு சிறந்த உதாரணம் இந்திரா காந்தி
iron-lady-of-india-cong-pays-tributes-to-indira-gandhi-on-death-anniversary

By

Published : Oct 31, 2021, 10:50 AM IST

Updated : Oct 31, 2021, 11:05 AM IST

டெல்லி:நாட்டின் முதல் பெண் பிரதமரும் இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று போற்றப்படுபவருமான இந்திரா காந்தியின் 37ஆவது நினைவு நாள் இன்று (அக்.31) அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திரா காந்தியின் நினைவுநாளின்போது, டெல்லி, சக்தி ஸ்டால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி குடும்பத்தினர் மரியாதை செலுத்துவது வழக்கம்.

பெண் சக்திக்கு சிறந்த உதாரணம் இந்திரா காந்தி

அந்த வகையில், இந்திரா காந்தியின் நினைவு நாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”இன்று என் பாட்டி திருமதி இந்திரா காந்தியின் நினைவு நாள். என் பாட்டி கடைசி வரை பயமின்றி நாட்டுக்கு சேவை செய்தார். அவரது வாழ்க்கை எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.

பெண் சக்திக்கு சிறந்த உதாரணமான இந்திரா காந்தியின் தியாக நாளில் அவருக்கு என் பணிவான அஞ்சலி” என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க : அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம்!

Last Updated : Oct 31, 2021, 11:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details