தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: நேரில் ஆஜராக சிதம்பரத்துக்கு விலக்கு - ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், அவரது மகன் ஆகியோருக்கு விலக்கு அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

By

Published : Apr 7, 2021, 8:51 PM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா நிதி முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறது. இதில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அடிப்படையில், கடந்தாண்டு(2020) ஜூன் மாதம் சிதம்பரம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது சிதம்பரம் பிணையிலுள்ள நிலையில், அவர் மீதான வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இவ்வழக்கில் நேரில் ஆஜராக சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை காரணம் காட்டி இருவரும் நேரில் ஆஜராக விலக்களிக்குமாறு கோரியிருந்தனர்.

இருவரின் கோரிக்கையை ஏற்று நேரில் ஆஜராக விலக்களித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையும் படிங்க:இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முறையீடு!

ABOUT THE AUTHOR

...view details