சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் 4 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாகவும், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வட்டி விகிதம் 7.1 விழுக்காட்டிலிருந்து 6.4 விழுக்காடாகவும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் நேற்று (மார்ச் 31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிறு சேமிப்புத் திட்ட வட்டிக் குறைப்பு அறிவிப்பு வாபஸ் - nirmala sitharaman
08:11 April 01
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது என நேற்று(மார்ச்.31) வெளியான அறிவிப்பு இன்று திரும்பப் பெறப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அதன்படி, ஓராண்டுக்கான வைப்புத்தொகை வட்டி விகிதம் 5.5 விழுக்காட்டிலிருந்து 4.4 விழுக்காடாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 விழுக்காட்டிலிருந்து 6.5 விழுக்காடாகவும் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது என வெளியான அறிவிப்பு இன்று திரும்பப் பெறப்படுகிறது.
அதன்படி, 2020-2021 கடைசி காலாண்டில் ஏற்கெனவே இருந்த வட்டி விகிதம் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:உள்கட்டமைப்புக்காக 10 முதல் 12 லட்சம் கோடி ஒதுக்கப்படும் - நிர்மலா சீதாராமன்