தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது - அமிர்தசரஸ்

பஞ்சாப் அமிர்தசரஸ் அருகே எல்லையை தாண்டி பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ட்ரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

By

Published : Nov 26, 2022, 11:49 AM IST

அமிர்தசரஸ் (பஞ்சாப்): அமிர்தசரஸ் மாவட்டம் டாக் கிராமத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே எல்லை ட்ரோன் விமானம் பறக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் எச்சரிக்கையான பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த ட்ரோனைக் கண்டனர்.

அந்த ட்ரோன் மீண்டும் பாகிஸ்தான் எல்லையை நோக்கி செல்ல முயல பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினர். ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட உடன் காவல்துறை மற்றும் பிற துறைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனை தேடிய போது அது எல்லை அருகே ஒரு விவசாய நிலத்தில் கிடந்தது.

சுட்டு வீழ்த்தப்பட்டது Quadcopter DJI Matrice 300 RTK என்னும் அந்த சீன ட்ரோன் என பாதுகாப்புபடை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:40 பயணிகளுடன் கங்கையில் கவிழ்ந்த படகு - உயிர் சேதம் தவிர்ப்பு....

ABOUT THE AUTHOR

...view details