நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், அணு சக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.
அதில், கடந்த 7 ஆண்டுகளில் நிறுவப்பட்ட அணு மின்சார உற்பத்தித் திறன், 40%க்கு மேல் அதிகரித்து 4,780 மெகாவாட்டிலிருந்து 6,780 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
நாட்டிற்கு நீண்ட கால எரிசக்தி பாதுகாப்பை வழங்கும் விதமாக, உள்நாட்டு 3 நிலை அணு மின்சாரத் திட்டத்தை இந்தியா பின்பற்றி வருகிறது. இது தவிர வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன், இலகு நீர் அணுஉலைகள் அடிப்படையிலான தூய்மையான மின்சாரத்தை வழங்குவதற்கான கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.