தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

102 வயதிலும் வரிசையில் நின்று வாக்களித்த முதியவர்! - உள்ளாட்சித் தேர்தலில் வரிசையில் நின்று வாக்குப்பதிவு

லூதியானா: 102 வயதான முதியவர் ஒருவர், உள்ளாட்சித் தேர்தலில் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Punjab
Punjab

By

Published : Feb 14, 2021, 8:04 PM IST

பஞ்சாபில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 117 இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள், காலை முதல் ஆர்வமுடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் 102 வயதான உஜாகர் சிங் என்பவர், வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

102 வயதிலும் வரிசையில் நின்று வாக்களித்த முதியவர்
இதுகுறித்து அவர் கூறுகையில், " எனது உறவினர்களுடன் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளேன். என்னால் கால்களை அசைக்க முடியாது. மூட்டுப் பகுதியிலும் வலி உள்ளது. ஆனாலும், நான் பஞ்சாயத்து தேர்தலாக இருந்தாலும் மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் வாக்களிக்க தவறியதில்லை. இந்த நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:FASTag ஃபாஸ்டேக் இல்லையேல் இருமடங்கு கட்டணம் - நினைவிருக்கட்டும் மக்களே!

ABOUT THE AUTHOR

...view details