காந்திநகர் (குஜராத்) :கடல் வழி ஊடுருவல், சட்டவிரோதமான மீன் பிடிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை தடுப்பதற்காக அதிவேக இடைமறிப்பு படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்ந வகையில், நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இடைமறிப்பு படகான சி-454 இன்று (டிசம்பர் 16) இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது.
இந்த படகினை, எல் அன்ட் டி (L&T) தயாரித்துள்ளது. இது அந்நிறுவனத்தால் இந்திய கடலோர காவல் படைக்கு தயாரிக்கப்பட்டுள்ள 54ஆவது படகாகும். குஜராத் மாநிலம் சூரத் நகரில் நேற்று (டிசம்பர் 15) நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கடலோர காவல் படையின் ஐஜி ராகேஷ் பால் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் சூரத் காவல் ஆணையர் அஜய் தோபர் சி-454 படகினை இந்திய கடலோர காவல் படையில் இணைத்தார்.