மனிதவள மேம்பாட்டு குறியீடு எனப்படும் (Human Development Index) விவரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யூஎன்டிபி (United Nation Development Programme) வெளியிட்டுள்ளது.
இந்தியா இரண்டு இடங்கள் சரிவு
கடந்தாண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 129ஆவது இடத்திலிருந்த நிலையில், தற்போது இரண்டு இடங்கள் சரிந்து 131ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சரிவு குறித்து UNDP அலுவலர்கள் கூறுகையில், பல்வேறு கூறுகளில் இந்தியா சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்டாலும், மற்ற நாடுகள் இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டன. இதுவே, இந்தியாவின் பின்னடைவுக்கு காரணமாக உள்ளது என்றனர்.