இஸ்ரேல் யெலாத் நகரில் 70வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 80 பேர் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், மாடலுமான ஹர்னாஸ் சாந்து (21) கலந்து கொண்டு பட்டம் வென்றுள்ளார்.

இதன்மூலம் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. முன்னதாக இந்த பட்டத்தை 1994 ஆம் ஆண்டு சுஷ்மிதா சென்னும், 2000 ஆம் ஆண்டு லாரா தத்தாவும் வென்றனர்.
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற ஹர்னாஸ் சாந்து ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு மிஸ் சண்டிகர் பட்டத்தையும், 2019 ஆம் ஆண்டு மிஸ் பஞ்சாப் பட்டத்தையும் வென்றவர். இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த இவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:உலக ஆணழகன் பட்டத்தை வென்ற தமிழர்!