தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழந்தை வரவுக்காக காத்திருக்கும் முதல் மூன்றாம் பாலின் தம்பதி!

கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மூன்றாம் பாலின தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் பெற்றோராக உள்ள முதல் மூன்றாம் பாலின தம்பதி
இந்தியாவில் பெற்றோராக உள்ள முதல் மூன்றாம் பாலின தம்பதி

By

Published : Feb 4, 2023, 8:09 AM IST

Updated : Feb 4, 2023, 5:41 PM IST

கேரளா:கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மூன்றாம் பாலின தம்பதியினர் அடுத்த மாதம் தங்களுக்கு குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்துள்ளனர். நாட்டிலேயே முதல் முறையாக மூன்றாம் பாலின தம்பதியினருக்கு பிறக்கவிருக்கும் குழந்தையாகும். நடனக் கலைஞரான ஜியா பவல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இணையர் ஜஹாத் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

பயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எட்டு மாத கரு ஜஹாத்தின் வயிற்றில் வளர்ந்து வருகிறது. நாங்கள் பெற்றோராக வேண்டும் என்ற கனவு நினைவாக உள்ளது. இந்தியாவிலேயே திரு நம்பியர் கருவுறுதல் இதுவே முதல் முறையாகும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த ஜோடி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இருப்பினும், ஆணாக மாறும் செயல்முறையில் ஈடுபட்டிருந்த ஜஹாத்துக்கு, தற்போது குழந்தை பிறக்கவிருப்பதால் மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களின் ஆதரவிற்காக பவல் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ADHD நோயால் பாதிக்கப்பட்ட கேரள சிறுவனின் படைப்பு.!

Last Updated : Feb 4, 2023, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details