தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விண்ணில் பாய்ந்தது விக்ரம் எஸ் ராக்கெட் ... - இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய்

இந்தியாவில் முதன் முதலாக தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விக்ரம் எஸ் ராக்கெட் இன்று (நவ-18) விண்ணில் பாய்ந்தது.

Etv Bharatவிண்ணில் பாய்ந்தது விக்ரம் ராக்கெட் எஸ் - இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்
Etv Bharatவிண்ணில் பாய்ந்தது விக்ரம் ராக்கெட் எஸ் - இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

By

Published : Nov 18, 2022, 11:50 AM IST

Updated : Nov 18, 2022, 12:28 PM IST

ஸ்ரீஹரிகோட்டா:இந்தியாவில் முதன் முதலாக தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விக்ரம் எஸ் ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாயின் நினைவாக இந்த ராக்கெட்டிற்கு விக்ரம் எஸ் என பெயரிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 11.30 மணி அளவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட், விக்ரம்-எஸ் மூன்று செயற்கைக்கோள்களுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் 6 மீட்டர் உயரமும், 545 கிலோ எடையும் கொண்டது. இதை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உருவாக்கியுள்ளது. ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டுள்ள மூன்று செயற்கைக்கோள்கள் சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் ஸ்பேஸ் கிட்ஸ், ஆந்திராவை தளமாகக் கொண்ட என்-ஸ்பேஸ்டெக் மற்றும் ஆர்மேனியன் பாஸூம்க்யூ ஸ்பேஸ் ரிசர்ச் லேப் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவையாகும்.

கடந்த 2020 ஆம் ஆண்டு விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது. இதற்கான திட்டத்திற்கு பிராரம்ப் என பெயரிடப்பட்டது. இந்த ராக்கெட்டில் உள்ள செயற்கை கோள்கள் புவி மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க:மெட்டா நிறுவனத்தின் புதிய இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்

Last Updated : Nov 18, 2022, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details