டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44 ஆயிரத்து 59 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 16 நாள்களாக 50 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவாக, அதாவது 4.85 விழுக்காடாக உள்ளது.
நேற்று (நவ.22) ஒரே நாளில் நாட்டில் 41 ஆயிரத்து 24 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்து 62ஆயிரத்து 641ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93.68 விழுக்காடாக அதிகரித்துள்ளது.