தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணையிலா? - வெளியுறவு அமைச்சகம் விளக்கம் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

உக்ரைன் நாட்டில் ராணுவத்தினர் இந்திய மாணவர்களை பிணையில் வைத்திருப்பதாக எழுந்துள்ள தகவல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

MEA spokesperson
MEA spokesperson

By

Published : Mar 3, 2022, 12:32 PM IST

Updated : Mar 3, 2022, 1:13 PM IST

உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தாம் பாக்ச்சி, உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், "உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களிடம் வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கார்கிவ் பகுதியில் சிக்கியிருந்த பல மாணவர்கள் நேற்று வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். இந்திய மாணவர்களை உக்ரைன் காவல்துறை பிணை கைதிகளாக வைத்திருப்பதாக எந்தவொரு தகவலும் அரசுக்கு கிடைக்கவில்லை.

கார்கிவ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மாணவர்களை மேற்கு பகுதிக்கு கொண்டு செல்ல சிறப்பு ரயில் சேவை வேண்டும் என உக்ரைன் அதிகாரிகளிடம் அரசு கோரிக்கை வைத்துள்ளது. உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து இந்தியர்கள் பலர் பத்திரமாக மீட்கப்பட்டுவருகின்றனர். இதற்கு உறுதுணையாக உக்ரைன் அரசும் அதிகாரிகளும் செயல்படுகிறார்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, "உக்ரைன் ராணுவம் தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்திய மாணவர்களை பிணை கைதிகளாக பிடித்துவைத்துள்ளதாக ரஷ்ய தூதரகம் பரபரப்பு தகவலை தெரிவித்து. போர் தீவிரமான நடைபெறும் இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பிடித்துவைத்துள்ளதாகவும், இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற தேவையான உதவிகளை ரஷ்ய அரசு மேற்கொள்ள தயார் எனவும் ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக விளக்கமளித்துள்ள உக்ரைன் அரசு, "ரஷ்யா ராணுவம் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்துவதன் காரணமாகவே, இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்" என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:CRDA சட்டப்படி செயல்படுங்கள், தலைநகர் விவகாரம் ஆந்திரா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Mar 3, 2022, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details