தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உக்ரைனில் உயிரிழந்த மாணவர்: 3 வாரங்களுக்குப் பின் இந்தியா வரும் உடல் - தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு

உக்ரைனின் கார்கீவ் நகரில் ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல், ஏறத்தாழ மூன்று வாரங்களுக்குப் பின் நாளை மறுதினம் (மார்ச் 20) இந்தியா வருகிறது. இதனை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதிசெய்தார்.

நவீன் சேகரப்பா
நவீன் சேகரப்பா

By

Published : Mar 18, 2022, 8:58 PM IST

பெங்களூரு: உக்ரைன் மீது ரஷ்யா பிப். 24ஆம் தேதி போரை தொடங்கியது. தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ்வில் உள்ள கார்கீவ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பா, கடந்த மார்ச் 1ஆம் தேதி ரஷ்யத் தாக்குதலில் உயிரிழந்தார்.

22 வயதான நவீனின் குடும்பத்தினர், கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள சால்லகேரி கிராமத்தில் வசிக்கின்றனர். நவீன் உயிரிழந்த தகவலைக்கேட்ட பின்னர், மனமுடைந்துபோன அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதைக்காக உடலை இந்தியா கொண்டுவர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

பிரதமர் கொடுத்த வாக்கு

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, நவீனின் தந்தையை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறிய நிலையில், நவீனின் உடலை இந்தியா கொண்டுவர அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து, நவீன் உயிரிழந்து இரண்டரை வாரத்திற்கும் மேலான நிலையில், அவரது உடலை இந்தியா கொண்டுவர இந்தியத் தூதரகம் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நவீன் சேகரப்பாவின் உடல் நாளை மறுதினம் (மார்ச் 18) பெங்களூரு விமான நிலையம் வந்தடையும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். நவீனின் உடல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வந்து சேரும் எனவும் தெரிவித்தார்.

நவீனின் குடும்பத்தினர், நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம், அவரின் உடலை அரசு மருத்துவக்கல்லூரிக்கு, மாணவர்களின் கல்வி தொடர்பான பயன்பாட்டிற்கு தானமாக வழங்க உள்ளோம் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உக்ரைன் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசா?

ABOUT THE AUTHOR

...view details