ஹைதராபாத்:அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அன் ஆர்ட்ஸ் நிறுவனம் (ஆஸ்கர் குழுமம்) 2023இன் உறுப்பினராக 398 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த 398 நபர்கள் கொண்ட வரிசையில் 12 பேர் இந்திய சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் பிரபல நடிகர் இயக்குநர் மணிரத்னம், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், கரண் ஜோஹர், சித்தார்த் ராய் கபூர், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீராவணி மற்றும் ஆர்ஆர்ஆர் செந்தில் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் வீக்கெண்ட் மற்றும் டெய்லர் ஷிப்ட் ஆகியோர் உடன் இந்திய திரைத் துறையைச் சேர்ந்த 12 நட்சத்திரங்கள் இணைந்து உள்ளனர். அகாடமி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஜனத் யாங் “அகாடமி குழுமம் புதியதாக 398 உறுப்பினர்களை சேர்ப்பதில் பெருமை கொள்கிறது. இந்த குழுவில் இணைந்துள்ளவர்கள் சினிமாத் துறையில் உலகளாவிய சாதனை புரிந்தவர்கள்.
மேலும், உலக சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்” என கூறினார். சினிமாத் துறையில் திறமை, அர்ப்பணிப்பு, தொழில் முறை திறன்களை அடிப்படையாகக் கொண்டு அகாடமி குழுமத்திற்கு இந்த 398 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இந்த 398 நபர்கள் கொண்ட புதிய குழு சமீப காலங்களில் பாதியாக குறைக்கப்பட்டு தேந்தெடுக்கப்பட்ட குழுவாகும்.
இதையும் படிங்க:Maamannan: பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது ‘மாமன்னன்’