மும்பை:இந்திய கடற்படைக்கு சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் ஒன்று இன்று(மார்ச்.8) காலை மும்பை கடற்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில் மூன்று கடற்படை வீரர்கள் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் மும்பை கடற்கரைக்கு அருகே உள்ள கடல்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக செய்தி வெளியானது. வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகவில்லை என கடற்படை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். மும்பை கடற்கரை பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டரில், திடீரென மின் இழப்பு ஏற்பட்டதால் கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.