மும்பை: தமிழ்நாடு சட்டப் பேரவைக்கூட்டத்தில் அரசின் உரையில் சில பகுதிகளைப் புறக்கணித்து, வெளியேறியதன்மூலம் அவை மரபை ஆளுநர் ஆர்.என்.ரவி மீறியதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் க்ளைட் க்ராஸ்டோ தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் க்ளைட் க்ராஸ்டோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மாநிலத்தின் பாதுகாவலர்களாக ஆளுநர்கள் கருதப்படுவதாகவும், மாநில அரசியலமைப்பை நடுநிலையில் வைக்கும் கடமை ஆளுநருக்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக்கூட்டத்தில் மாநில அரசு தயாரிக்கும் உரையை ஆளுநர் படிப்பது வழக்கம். தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிட்ட பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததை அடுத்து, ஆளுநரின் மொத்த கருத்துகளையும் அவைக் குறிப்புகளில் இருந்து நீக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்ததாக கூறப்பட்டுள்ளது.