ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான இஷான் கிஷன், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ரிங் ரோட்டில் உள்ள தோனியின் பண்ணை வீட்டிற்கு மிக அருகில் ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்க உள்ளார்.
இது குறித்து நமது ஈடிவி பாரத்திற்கு தொலைபேசி மூலம் பேசிய இஷானின் தந்தையும் தொழிலதிபருமான பிரணவ் குமார் பாண்டே, “ இஷான் இப்போது ரியல் எஸ்டேட் துறையிலும் களமிறங்க உள்ளார். இதற்காக ராஞ்சியில் உள்ள மகேந்திர சிங் தோனியின் பண்ணை வீட்டிற்கு மிக அருகில் இந்த ரியல் எஸ்டேட் தொடங்கப்பட உள்ளது.
ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ மைதானத்தில் ஜார்க்கண்ட் மற்றும் கேரளா இடையே ரஞ்சி போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில் இஷான் கிஷன் ஜார்க்கண்டில் இருந்தும், சஞ்சு சாம்சனும் கேரளாவின் கேப்டனாகவும் விளையாடி வருகின்றனர். ஆகையால் இதற்கான பூமி பூஜையில் இருவரும் கலந்துகொள்வார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை தொடர்ந்து, இரட்டை சதம் அடித்து அசத்தினார், வீரர் இஷான் கிஷன். இதன் மூலம் , இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலகக்கோப்பை கால்பந்து: முதலாவது அரையிறுதியில் அர்ஜென்டினா - குரேஷியா மோதல்