ஜம்மு:ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
ந்நிலையில் ஜம்முவில் தங்கியிருந்த லடாக்கை சேர்ந்த 388 பேர், விமானப்படை விமானங்களில் பத்திரமாக லேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், லடாக்கை சேர்ந்தவர்கள் விமானங்களில் ஏன் அனுப்பப்பட்டனர் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.