தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - இலங்கை 12 நாள் கூட்டு ராணுவப் பயிற்சி - இந்தியா இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி

இந்தியா - இலங்கை 'மித்ரா சக்தி' என்ற பெயரில் 12 நாள் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ளவுள்ளன.

counter-terror cooperation
counter-terror cooperation

By

Published : Oct 2, 2021, 4:54 PM IST

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்காக கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ளவுள்ளது. மித்ரா சக்தி என்ற பெயரில் இரு நாட்டு ராணுவமும் இந்த கூட்டு ராணுவப் பயிற்சியை வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.

இலங்கையில் உள்ள அம்பாரா என்ற பகுதியில் அக்டோபர் நான்காம் தேதி தொடங்கும் இப்பயிற்சி அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த கூட்டுப் பயிற்சி இரு நாட்டு உறவை மேம்படுத்தவும், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளத் தயாராகவும் உதவும்.

இந்திய ராணுவ வீரர்கள் 120 பேர் இந்த பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர். தெற்காசிய பிராந்தியத்தின் இரு முக்கிய நாடுகள் மேற்கொள்ளும் இப்பயிற்சி பிராந்திய அமைதிக்கு அடித்தளமாக அமையும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இரு நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சியானது 2019ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்றது.

இதையும் படிங்க:விமர்சனங்களை பெரிதும் மதிப்பவன் நான் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details