தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமெரிக்க மக்கள் தங்கள் தவறை திருத்திவிட்டனர்... இந்திய மக்கள்?- சிவசேனா

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்றதிலிருந்து, இந்தியா பாடம் கற்றால் நாட்டிற்கு நல்லது என சிவசேனா தெரிவித்துள்ளது.

india-should-learn-from-donald-trumps-defeat-shiv-sena
india-should-learn-from-donald-trumps-defeat-shiv-sena

By

Published : Nov 9, 2020, 12:44 PM IST

மும்பை:சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா வெளியிட்டுள்ள தலையங்கத்தில், "அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர். ட்ரம்பைத் தேர்ந்தெடுத்த தவறை அமெரிக்க மக்கள் நான்கு ஆண்டுகளிலேயே சரிசெய்தனர். அவரால் ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. டிரம்பின் தோல்வியிலிருந்து நாம் எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால், அது நாட்டிற்கு நல்லது.

அமெரிக்காவில் வேலையின்மை கரோனா பாதிப்பைவிட அதிகளவு உள்ளது. இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, தேவையற்றவைகளுக்கு ட்ரம்ப் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்தார்.

அமெரிக்காவில் முன்னதாகவே அதிகாரம் மாறிவிட்டது. பிகாரிலும் இதே நிலை ஏற்படலாம். பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் மக்களுக்கு எங்களைத் தவிர வேறு மாற்று இல்லை என்ற மாயையிலிருந்து கட்சியினர் வெளிவர மக்கள் தக்க பதிலடி அளிக்கவேண்டும்.

ட்ரம்ப் தற்போதுவரை தனது தோல்வியை ஏற்கவில்லை. மாறாக அவர் வாக்களிக்கும் முறையை குற்றம் சுமத்திவருகிறார். டிரம்ப் இந்தியாவில் மிகுந்த அன்புடன் வரவேற்கப்பட்டார் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது. தவறான மனிதருடன் நிற்பது நமது கலாசாரம் அல்ல, ஆனால் நமது நாட்டில் அதுபோன்ற செயல்கள் இன்னும் தொடர்கிறது.

அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் சாதனைகளை ட்ரம்ப் ஏற்க மறுத்தார். இதன் மூலம், அவர் பெண்களை மதிக்க முற்படுவதில்லை என்பது தெரிகிறது. இதுபோன்ற நபர்களையே பாஜகவும், பிரதமர் மோடியும் ஆதரித்தனர் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.

இந்தியா கோடிக் கணக்கான செலவில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தாலும், அந்நாட்டு மக்கள் தங்கள் தவறை சரிசெய்துள்ளனர். அதேபோல், பிரதமர் மோடி மற்றும் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களைப் புறக்கணித்து இளம் தலைவரான தேஜஸ்விக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ட்ரம்ப்: ’லூசர்..லூசர்..’ எனக் கத்திய பைடன் ஆதரவாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details