ஹாங்சோ :ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி தங்க பதக்கம் வென்றது. 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.
Asian Games : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்! ஆடவர் அணி அசத்தல்! - இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றது. இந்தியாவுக்கு கிடைத்த ஆறாவது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Published : Sep 28, 2023, 8:12 AM IST
இதில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றது. துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர் அணியின் சரப்ஜத் சிங், ஷிவா நர்வால், அர்ஜூன் சிங் சீமா ஆகியோர் தங்கம் பதக்கம் வென்றனர். ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த ஆறாவது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :இந்தியா வர பாகிஸ்தான் அணிக்கு இவ்வளவு பிரச்சினையா? அதான் இவ்வளவு லேட்டா!