தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இலங்கைக்கு மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசலை வழங்கிய இந்தியா! - கொழும்பு

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு, மேலும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை வழங்கி இந்தியா உதவியுள்ளது.

India
India

By

Published : May 31, 2022, 10:46 PM IST

இலங்கை: கடும் பொருளாதார நெருங்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு, இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறி வருவதால், கடந்த 23ஆம் தேதி 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோலை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்தது.

இந்த நிலையில் மேலும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை இந்தியா அனுப்பியது. இந்த டீசல் நேற்று (மே 30) கொழும்பு சென்றடைந்ததாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்கி உதவியுள்ளது.

இதையும் படிங்க: நேபாள விமான விபத்து- 22 பேரின் உடல்களும் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details