தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக 2 ஆயிரத்து 288 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

By

Published : May 10, 2022, 12:07 PM IST

டெல்லி:ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று (மே 10) தினசரி கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டது. அதன்படி, "கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக 2 ஆயிரத்து 288 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 3 ஆயிரத்து 207 விட குறைவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 3 ஆயிரத்து 44 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். அதன்படி தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 63 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 10 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 103 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 637 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காலை வரை தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 190.50 கோடி டோஸ்களை கடந்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகிந்த ராஜபக்ச வீட்டுக்கு தீ வைப்பு... எம்எல்ஏ வீடுகளும் தீக்கிரையாகின...இலங்கையில் பதற்றம்

ABOUT THE AUTHOR

...view details