இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு மீண்டும்ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏழு மாத காலமாக தடுப்பூசிகள் ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்திருந்தது.
கடந்த மார்ச் மாத காலத்தில் நாட்டின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டிய நிலையில், தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஏற்றுமதி மீண்டும் தொடக்கம்
தற்போது இரண்டாம் அலை பாதிப்பு தணிந்துள்ள நிலையில், சீரம் இந்தியா நிறுவனம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளுக்கு முதலில் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. அன்மையில் கனடா இந்தியாவின் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, பாரத் பயோட்டெக் நிறுவனமும் கனடா போன்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பும் கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுவரை, மொத்தம் 121 கோடியே 76 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 78 கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 43 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:வரதட்சணை பணத்தை பெண்கள் கல்விக்காகச் செலவழித்த மணப்பெண்