நேபாளம், வங்கதேசம், மியான்மர், ஈரான் ஆகிய அண்டை நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தாம் பக்ச்சி இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், முதற்கட்டமாக மேற்கண்ட அண்டை நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியுள்ளோம். நிலைமையை தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். எனவே, உற்பத்தி, தேவைக்கு ஏற்றார் போல ஏற்றுமதி நடைபெறும் என்றார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் கோவிட்-19 பரவல் தீவிரமடைந்ததை அடுத்து, மருந்துகள், தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது இரண்டாம் அலை ஓய்ந்து, தினசரி பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தடுப்பூசி ஏற்றுமதி செய்ய அரசு தளர்வு அளித்துள்ளது. நாட்டில் இதுவரை 97 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:மன்மோகன் சிங் உடல்நிலையை நேரில் விசாரித்த ராகுல்