இந்தியாவில் கடந்த சில நாள்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 96 ஆயிரத்து 982 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 26 லட்சத்து 86 ஆயிரத்து 49ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
அதேபோல, நேற்று (ஏப்ரல் 5) 446 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 547ஆக அதிகரித்துள்ளது.