தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் 2 கோடியை தாண்டிய கரோனா பாதிப்பு

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833ஆக அதிகரித்துள்ளது

India
கரோனா

By

Published : May 4, 2021, 9:54 AM IST

இந்தியாவில் கடந்த சில நாள்களாகக் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 57 ஆயிரத்து 229 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேபோல், நேற்று (மே.4) 3,449 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்து 292ஆக உள்ளது.

தற்போது, 34 லட்சத்து 47 ஆயிரத்து 133 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை மொத்தமாக 15 கோடியே 89 லட்சத்து 32 ஆயிரத்து 921 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details