தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Covid-19 Update: நாட்டில் ஒரே நாளில் 11,919 பேருக்கு கரோனா பாதிப்பு - தினசரி கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 919 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 470 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

By

Published : Nov 18, 2021, 12:20 PM IST

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (நவம்பர் 17) 11 ஆயிரத்து 919 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 44 லட்சத்து 78 ஆயிரத்து 517ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (நவம்பர் 17) மட்டும் தொற்றால் 470 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 64 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 ஆயிரத்து 242 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இதன்மூலம் கரோனா தொற்று முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 38 லட்சத்து 85 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 114 கோடியே 46 லட்சத்து 32 ஆயிரத்து 851 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:COVID-19 vaccine: தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு ஆபத்து அதிகம்!

ABOUT THE AUTHOR

...view details