டெல்லி: கனடாவில் காலிஸ்தான் இயக்கத்தை ஊக்குவித்த சீக்கிய ஆர்வலர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில், கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது.
வடமேற்கு இந்தியாவிலிருந்து சுதந்திரமான பஞ்சாப் உருவாக வேண்டும் என்று விரும்பும் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு கனடா அரசு உதவி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கனடா அரசை கண்டித்து, இந்திய அதிகாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜூன் 18 அன்று கனடாவின் சர்ரே, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்துவாரா கோவிலுக்கு வெளியே காலிஸ்தான் இயக்கத்தை ஊக்குவித்த சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கனடா அரசு இந்திய உயர்மட்ட தூதரக அதிகாரியை வெளியேற்றியுள்ளது. கனடா அரசு இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது தொடர்பாக வெளிவிவகார அமைச்சகம் (MEA) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனடாவின் குற்றச்சாட்டு அபத்தமானதாகும். கனேடிய பிரதமரின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம்.
அவற்றை நாங்கள் நிராகரிக்கின்றோம், அதே போல் அவர்களின் வெளியுறவு அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் பார்த்தோம். காலிஸ்தான் இயக்கத்தை ஊக்குவிக்கும் சீக்கிய ஆர்வலர்களுக்கு கனடாவில் அடைக்கலம் அளித்து அந்நாட்டு அரசு இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.
கனடாவில் கொலைகள், மனித கடத்தல் மற்றும் குற்றங்கள் உட்பட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பது புதியதல்ல" இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ "இந்திய அரசின் உயர்மட்ட உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கனடா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.