ஏழாவது சர்வதேச யோகா தினம்: சிறப்பு முத்திரை வெளியீடு!
ஏழாவது சர்வதேச யோகா தினத்தன்று, டெல்லி தபால் வட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
India Post
டெல்லி:ஏழாவது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில், வரும் ஜூன் 21ஆம் தேதிவரை சிறப்பு முத்திரை வெளியீட்டு நிகழ்ச்சியை இந்திய தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது.
- டெல்லியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் ஜூன் 17 முதல் பதிவு செய்யப்படும் மற்றும் விநியோகிக்கப்படும் அனைத்து தபால்கள் மீது “யோகாவோடு இருங்கள், வீட்டில் இருங்கள்” எனும் செய்தி பொறிக்கப்படும்.
- தபால் நிலையங்களுக்கு வருவோரிடையே யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், டெல்லியில் உள்ள 60 முக்கிய தபால் நிலையங்களில் காணொலி ஒன்று ஒளிபரப்பப்படும்.
- கோவிட்டில் இருந்து குணமான பின்பு செய்யக்கூடிய யோகா குறித்த காணொலி உரை மற்றும் செய்முறை விளக்கம் ஜூன் 17 ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. டெல்லி தபால் வட்டத்தின் அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.
- கோவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி டெல்லி தபால் வட்டத்தின் பல்வேறு அலுவலகங்களில் யோகா பயிற்சி நிகழ்ச்சிகள் ஜூன் 21 ஆம் தேதியன்று நடத்தப்படும்.
- ஏழாவது சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் சிறப்பு தபால் உரையை டெல்லி வட்டத்தின் தலைமை தபால் அலுவலர் புது டெல்லி தலைமை தபால் நிலையத்தில் ஜூன் 21 அன்று வெளியிடுவார்.