ஐ.நா. : காஷ்மீர் எல்லைப் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் எழுப்பும் எரிச்சலூட்டும் வகையிலான கேள்விகளுக்கு பதிலளித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தெரிவித்தார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏப்ரல் மாதத்திற்கான தலைமை பொறுப்பை ரஷ்யா ஏற்று நடத்தி வருகிறது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதில் பலதரப்பட்ட உறுப்பினர்களின் பங்கு மற்றும் பலன் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான பாகிஸ்தானின் நிரந்திர பிரதிநிதி முனிர் கான், ஜம்மு காஷ்மீர் பிரச்சினை குறித்து தன் அறிக்கையில் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்து பேசிய ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்திர உறுப்பினர் ருச்சிரா கம்போஜ், "மறுகாலனியாக்கத்தின் அடிப்படை உண்மைகள் குறித்த புரிதல் மற்றும் முற்றிலும் அறிந்திராத வகையில் ஒரு நாட்டின் நிரந்திர பிரதிநிதியின் எரிச்சலூட்டும் கருத்துகளை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொண்டு இருப்பதாக கூறினார்.
மேலும் பாகிஸ்தான் பிரதிநிதியின் எரிச்சலூட்டும் கருத்துகளுக்கு பதிலளித்து பாதுகாப்பு கவுன்சிலின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார். மேலும் கடந்த கால கூட்டங்களில் காஷ்மீர் குறித்த கேள்விகளுக்கு இந்தியா கொடுத்த பதில்களை பாகிஸ்தான் குழுவு பார்க்குமாறு"அவர் தெரிவித்தார்.