டெல்லி:நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 795 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 201 நாள்களுக்கு பிறகு இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. இதனை ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 30 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 2 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், 179 பேர் தொற்று காரணமாக ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 47 ஆயிரத்து 373ஆக அதிகரித்துள்ளது.