ஹைதராபாத்:தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நாட்டிலேயே முதன் முறையாக கோல்டு ஏடிஎம்(Gold ATM) திறக்கப்பட்டுள்ளது. இதனை தெலங்கானா மகளிர் ஆணைய தலைவர் சுனிதா லக்ஷ்மரெட்டி திறந்து வைத்தார். இப்போது பயனர்கள் தங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏடிஎம்மிலிருந்து தூய தங்க நாணயங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் மூலம், 99.99 சதவீதம் தூய்மையான 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையிலான தங்க நாணயங்களை வாடிக்கையாளர்கள் பெற்றுகொள்ள முடியும். மேலும் தங்க நாணயங்களின் தர சான்றிதழும் கிடைக்கும். இந்த கோல்டு ஏடிஎம் 24 மணி நேரமும் செயல்படும் என கோல்டு சிக்கா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சையத் தருஜ் தெரிவித்தார்.