மரபணு உருமாறிய, அதிக வீரியம் உடைய புதிய வகை கரோனா வைரஸ் பரவல், பிரிட்டனில் தீவிரமடைந்துள்ளது. நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கும், இந்தப் புதிய வகை கரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் உடனான விமான சேவை ரத்து நீட்டிப்பு! - கரோனா வைரஸ் பரவல்
டெல்லி: பிரிட்டன் உடனான விமான சேவை ரத்து ஜனவரி 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 6 பேருக்கு உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று புதிதாக 14 பேருக்கு உருமாறிய கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதிவரை மத்திய அரசு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவில் பரவும் உருமாறிய கரோனா வைரசை கருத்தில்கொண்டு, பிரிட்டன் உடனான விமான சேவை ரத்து ஜனவரி 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.