டெல்லி:இதுகுறித்து ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், "இந்தியர்களின் தனிநபர் வருமானம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதற்கு பாஜகவிடம் பதிலில்லை. அரசாங்கம் கொள்கை ரீதியாக திவால்நிலையில் உள்ளது. பணவீக்கம், வேலை இழப்பு உள்ளிட்ட பொருளாதார காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிக மோசமாகிவிட்டது.
முன்னதாக தனிநபர் வருமானம் ரூ.94,270ஆக இருந்த நிலையில் இப்போது ரூ.91,481ஆக குறைந்துவிட்டது. உணவுப் பொருள்கள், பெட்ரோல், டீசல் விலையேற்றம் இந்திய பொருளாதார நிலை வரும் காலங்களில் மேலும் மோசமாக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது
அண்மையில் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துவருகின்றன. இதுதொடர்பாக ஈரான், கத்தார், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "வெறுப்பு வெறுப்பை மட்டுமே வளர்க்கிறது. அன்பு, சகோதரத்துவத்தின் பாதை மட்டுமே இந்தியாவை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் சோதனை