மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி பணிகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார். அப்போது கூறிய அவர், இந்தியாவில் புதிதாக ஏழு கோவிட்-19 தடுப்பூசிகள் தயார் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வரும் மார்ச் மாதம் முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும். அத்துடன் தேவைக்கேற்ப இந்த தடுப்பூசிகள் ஏற்றுமதி தொடர்பான கொள்கைகளை அரசு செயல்படுத்தும் எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்ஸின், சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.