டெல்லி:கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3,993 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் 49 ஆயிரத்து 948 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி தொற்று விகிதம் 0.46%ஆகவும், வாரந்திர தொற்று விகிதம் 0.68%ஆகவும் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 8,055 பேர் கரோனவாலிருந்து குணமடைந்துள்ளனர். இது வரை நாட்டில் ஒட்டு மொத்தமாக 4 கோடியே 24 லட்சத்து 6ஆயிரத்து 150 பேர் குணமாகியுள்ளனர்.