டெல்லி: நாட்டில் ஒரே நாளில் 15 ஆயிரத்து 823 நபர்களுக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகள் மூன்று கோடியே 40 லட்சத்து ஆயிரத்து 743ஆக அதிகரித்துள்ளது. 226 நபர்கள் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 51 ஆயிரத்து 226ஆக உள்ளது.
நாட்டில் தற்போது இரண்டு லட்சத்து ஏழாயிரத்து 198 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 22 ஆயிரத்து 844 நபர்கள் குணமடைந்ததை அடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை மூன்று கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 901ஆக அதிகரித்துள்ளது.
நாட்டின் வாரந்திர கரோனா தொற்று விகிதம் தற்போது 1.46 விழுக்காடாக உள்ளது. கடந்த 110 நாள்களாக மூன்று விழுக்காட்டுக்கும் கீழ் இந்த விகிதம் உள்ளது. தினசரி கரோனா பாதிப்பு விகிதம் 1.19 விழுக்காடாக உள்ளது.
நாட்டில் இதுவரை 96.43 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 8.43 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநில அரசுகளிடம் இருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நாட்டின் உள்கட்டமைப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்தும் மாபெரும் திட்டம்: தொடங்கிவைத்த மோடி