நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரத்து 41 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 36 லட்சத்து 78 ஆயிரத்து 786ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்து 621 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
நாடு முழுவதும் தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 29 லட்சத்து 31 ஆயிரத்து 972ஆக அதிகரித்தது. 276 பேர் தொற்று காரணமாக ஒரேநாளில் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 47 ஆயிரத்து 194ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை மொத்தம் 86 கோடியே ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 11 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஸ்டேட் வங்கிபோல 4-5 வங்கிகள் நாட்டிற்குத் தேவை - நிர்மலா சீதாராமன்