தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் ஒரு நாளில் 28 ஆயிரம் பேருக்கு கரோனா - இந்தியாவில் கரோனா உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 181 பேர் உயிரிழந்துள்ளனர்.

COVID-19
COVID-19

By

Published : Sep 12, 2021, 3:03 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 591 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 921 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (செப். 11) மட்டும் 181 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதுவரை தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 42 ஆயிரத்து 655 அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை மொத்தமாக மூன்று கோடியே 24 லட்சத்து ஒன்பதாயிரத்து 345 நபர்கள் குணமடைந்துள்ளனர்.

இதுவரை மொத்தமாக 73 கோடியே 82 லட்சத்து ஏழாயிரத்து 378 நபர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72 லட்சத்து 86 ஆயிரத்து 883 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாகக் கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 487 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:இந்திரா காந்திக்கு எதிரான தீர்ப்பு தைரியம் மிக்கது - தலைமை நீதிபதி ரமணா

ABOUT THE AUTHOR

...view details